Princiya Dixci / 2016 ஜனவரி 26 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
- பேரின்பராஜா சபேஷ்,வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு பாடசாலையொன்றின் 16 வயதுடைய மாணவியை துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஆசிரியரை, எதிர்வரும் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் மணிக்கவாசகர் கணேசராஜா, இன்று செவ்வாய்க்கிழமை (26) உத்தரவிட்டார்.
ஆசிரியருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இதற்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் அதிபருக்கு எதிராகவும் நடவடிக்கையெடுக்க வேண்டுமெனவும், குறித்த இருவரும் வேறெந்தப் பாடசாலையிலும் கடமையாற்ற முடியாதவாறு செய்யுமாறு கோரி பாடசாலை முன்றலில் பெற்றோர் மற்றும் பொதுமக்கள், நேற்று திங்கட்கிழமை (25) பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த மட்டக்களப்பு பொலிஸார், சந்தேகத்தின் பேரில் அதேபாடசாலையைச் சேர்ந்த 52 வயதானவரை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்செய்ததையடுத்து நீதவான், மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .