Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
'அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆய்வின் பிரகாரம், கடந்த 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்ததற்குரிய கல்வெட்டுச் சான்றுகளும் தமிழ் பிராமிய எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்களும் சான்றாக அமைந்துள்ளன' என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
கலாசார அமைச்சின் 157 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், வெல்லாவெளியில் அமைக்கப்பட்ட கலாசார மத்திய நிலையத்தை செவ்வாய்க்கிழமை (16) திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,
'1833ஆம் அண்டுக்கு முன்னர் கோல்புறுக் கமரன் சீர்திருத்தம் வருவதற்கு முன்னர், வடக்கு - கிழக்கு தமிழ் பிரிவும் கண்டி இராச்சியமும் கரையோர இராச்சியமும் தான் இந்த நாட்டிலே 3 பிரிவுகளாகக் காணப்பட்டிருந்தன.
கண்டி இராச்சியத்தை அன்னியர்கள்; கைப்பற்ற முனைந்தபோது அந்த இராச்சியத்தைக் காப்பாற்றுவதற்காக படைகளை அனுப்பி வைத்த இடம், இந்த போரதீவுப்பற்றாகும். இதற்குரிய சான்றுகளும் இருக்கின்றன.
இப்பகுதியிலே அமைந்துள்ள திருப்பழுகாமம் எனும் ஊரிலிருந்துதான் கண்டி இராச்சிய மன்னனின் பாதுகாப்புக்காக குதிரைப்படைகளையும் யானைப் படைகளையும். அக்காலத்தில் அனுப்பி வைத்திருந்துள்ளார்கள். இப்பிரதேசம் தமிழர்களின் பூர்வீக கலாசாரங்கள் பின்பற்றப்பட்டு வந்த தமிழ் சிற்றரசர்கள் வாழ்ந்து வந்த இடமாகும்.
போரதீவுப்பற்று பிரதேசம் பூர்வீகமான தமிழ் மக்களின் பிரதேசமாகும், அண்மையில் இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆய்வின் பிரகாரம், கடந்த 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் தமிழர்கள் வாழ்ந்ததற்குரிய கல்வெட்டுச் சான்றுகளும், தமிழ் பிராமிய எழுத்துக்கள் பொறிக்க்படப்பட்ட கல்வெட்டுக்களும், சான்றாக அமைந்துள்ளன. எனவேதான் இப்பிரதேசம் பூர்வீக தமிழ் பிரதேசமாகும்.
1949ஆம் ஆண்டுக்குப் பின்னர் கல்லேயா குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டதன் பின்னர், சில வித்தியாசங்கள் ஏற்படுத்தப்பட்டன. எனவே, இங்குள்ள தமிழ் மக்களின் கலை கலாசாரங்கள் மேம்படுத்தப்பட வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும்' என அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago