Suganthini Ratnam / 2015 நவம்பர் 06 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உப்பூறல் கிராமத்திலிருந்து இலங்கைத்துறை முகத்துவாரத்துக்கான பஸ் சேவை பத்து வருடங்களின் பின்னர் மீண்டும் நேற்று வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
சுனாமியின்போது லங்காபட்டினப்பாலம் உடைவடைந்ததன் பின்னர், உப்பூறல் கிராமத்துக்கும் இலங்கைத்துறை முகத்துவரத்துக்குமிடையிலான பஸ் சேவை தடைப்பட்டது. இதனால் உப்பூறல், சீனன்வெளி போன்ற கிராமங்களிலிருந்து லங்காபட்டினத்திலுள்ள பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் போக்குவரத்துப் பிரச்சினைக்கு முகங்கொடுத்து வருவதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் மூதூர் டிப்போ முகாமையாளரின் கவனத்துக்கு கொண்டுவந்து இந்த பஸ் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெருகல் பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த சுனாமியின்போது லங்காபட்டினப்; பாலம் உடைந்ததன் பின்னர் இக்கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டதக காணப்படுகின்றன. அடிப்படைவசதி ஏதும் அற்ற நிலையிலையே இக் கிராமங்களில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
சில பெற்றோர் தங்களது பிள்ளைகளை பொருளாதார நெருக்கடி காரணமாக கூலி வேலைக்கு அனுப்பியும் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுத்தியும் வருகின்றனர். இப்போக்குவரத்து பிரச்சினை காரணமாக சுமார் 75 சதவீதமான மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகலுக்கு உள்ளாகியுள்ளனர்.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025