2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

10 மில்லியன் ரூபாவை பெற்றுக்கொடுத்தேன்: பொன்.செல்வராசா எம்.பி

Kogilavani   / 2013 ஜனவரி 05 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜதுசன்)
மட்டக்களப்பு  மாவட்டத்தில்  வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு  உலர் உணவுப்பொருட்களை வழங்க 10 மில்லியன் ரூபாவை  அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சில் இருந்து தான் பெற்றுக்கொடுத்ததாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தைச்சேர்ந்த  வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  உலர் உணவுப்பொருட்கள்  கிடைக்கவில்லை  என பொதுமக்களிடம் இருந்து கிடைத்த முறையீட்டை அடுத்து மாவட்ட அரச அதிபரிடம் வினவியபோது அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சில் இருந்து 6 மில்லியன் ரூபாய் மட்டுமே கிடைத்ததாகவும் அது போதாது என அரச அதிபர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக தான் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன்  தொலைபேசியில்  தொடர்பு கொண்டு பேசியதை அடுத்து அமைச்சர்  10 மில்லியன் ரூபாய் வழங்குவதாக  தன்னிடம் உறுதி அளித்ததார்.

அதன் பிரகாரம் 10 மில்லியன் ரூபாய் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சில் இருந்து கிடைத்துள்ளதாக  அரசாங்க அதிபர்  தன்னிடம்  தெரிவித்தார் என்றும் அவர் சொன்னார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X