2025 மே 08, வியாழக்கிழமை

10 அடி நீளமான முதலை மடக்கி பிடிப்பு

Kogilavani   / 2014 ஏப்ரல் 08 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு, விநாயகபுரத்திலுள்ள வீடொன்றினுள் இருந்து 10 அடி நீளமான முதலையொன்று செவ்வாய்க்கிழமை செவ்வாய்க்கிழமை மடக்கி பிடிக்கப்பட்டுள்ளதாக பிரதேசத்துக்குப் பொறுப்பான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சிவகலா சோமசுந்தரம் தெரிவித்தார்.

மேற்படி பிரதேசத்தில் வசித்து வந்த பெண்ணொருவரின் வீட்டுக்குள் முதலை புகுந்ததும் அப்பெண் அச்சத்தில் கூக்குரலிடவே பொதுமக்கள் திரண்டு முதலையைக் கட்டிப் போட்டுள்ளனர்.

பின்னர், இது தொடர்பில் வெருகல் பொலிஸாருக்கும் படையினருக்கும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் அறிவித்ததாக  பிரதேசத்துக்குப் பொறுப்பான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சிவகலா சோமசுந்தரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் வரட்சி நிலவி வரும் நிலையில் நீர்நிலைகள் வற்றி வருகின்றன. இந்நிலையில் வெருகல் பிரதேசத்திலுள்ள  சின்னக்குளத்திலிருந்து மேற்படி முதலை கிராமத்திற்குள் புகுந்திருக்கலாமென பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X