2026 மே 09, சனிக்கிழமை

100 ஏக்கர் நிலபரப்பில் சின்ன வெங்காயச்செய்கை

Kogilavani   / 2013 ஜூன் 02 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரீ.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு மாவட்டத்தில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் சின்ன வெங்காயச் செய்கை மேற்கொள்ளப்படுவதாக மாவட்ட விவசாய திணைக்கள உதவி பணிப்பாளர் இரா.ஹரிகரன் தெரிவித்தார்.

இம்மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள களுதாவளை, தேத்தாத்தீவு, செட்டிபாளையம் போன்ற இடங்களில் அதிகமாக சின்ன வெங்காயச்செய்கை இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து விதைகளை எடுத்து வந்தே இங்கு நடுகை செய்வதாக தெரிவித்துள்ள விவசாயிகள் அரசாங்கம் விதைகளை வழங்குமானால் இன்னும் பாரியளவில் சின்ன வெங்காய செய்கையை மேற்கொள்ள முடியுமென விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் மிளகாய் செய்கையிலும்; மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக மாவட்ட விவசாய திணைக்கள உதவி பணிப்பாளர் இரா.ஹரிகரன் தெரிவிததுள்ளார்;.

இம்மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகப்பிரிவில் அதிகமானவர்கள் இச்செய்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் களுதாவளை, களுவாஞ்சிக்குடி, மாங்காடு, குருக்கள்மடம் ஆகிய இடங்களில் அதிகளவில் மிளகாய் செய்கை பண்ணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இப்பகுதியில் மிளகாய் அதிக விளைச்சலை தந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .