Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2021 மே 06 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.எம்.பர்ஸான்
கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மஜ்மா நகர் பகுதியில் தெரிவுசெய்யப்பட காணியொன்றில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களின் சடலங்கள் 100 ஐத் தாண்டி நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்றால் மரணிக்கும் நபர்களை அடக்கம் செய்யும் பணிகள் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்று வருவதாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.
மஜ்மா நகர் பகுதியில் கொரோனா தொற்றினால் மரணிக்கும் நபர்களை அடக்கம் செய்யும் பணிகள், கடந்த மார்ச் மாதம் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.
அந்தவகையில், நேற்று (05) நல்லடக்கம் செய்யப்பட 8 ஜனாஸாக்களுடன் இதுவரை 101 கொரோனா தொற்றாளர்களின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.
இதில், 98 முஸ்லிம்களின் ஜனாஸாக்களும் 2 கிறிஸ்தவர்களின் சடலமும் 1 பெளத்தரின் சடலம் உட்பட 101 நபர்களின் உடல்கள் அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நாட்டில் இதுவரை 703 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
9 hours ago
9 hours ago