2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

11 வயது சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திவிட்டு தலைமறைவான நபரை தேடி பொலிஸார் வலைவீச்சு

Suganthini Ratnam   / 2012 ஜூலை 03 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பு, கொக்குவில் பகுதியில் 11 வயதுடைய சிறுமி ஒருவரை  பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அவரை நள்ளிரவில் வீதியில் விட்டுச்சென்ற ஒருவரை மட்டக்களப்பு பொலிஸார் தேடி வருகின்றனர்.

மேற்படி சிறுமியின் தாயார்  வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில,; தந்தையின் பாதுகாப்பில் மேற்படி சிறுமியும் அவரது 6 வயதான சகோதரர்; ஒருவரும் இருந்துவந்துள்ளனர்.

கடந்த 29ஆம் திகதி மேற்படி சிறுமியின் தந்தை தனது தந்தையின் மரணச்செய்தி கேட்ட நிலையில், இரு சிறார்களையும்; உறவினர் ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு மரண வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் அன்றையதினம் இரவு 10 மணிக்கு வந்த மேற்படி சந்தேக நபர்,  மரண வீட்டிற்கு தான் செல்வதாகவும் இரு சிறார்களையும்; தந்தையிடம் அழைத்துச் செல்வதாகவும் கூறி இரு சிறார்களையும் அழைத்துச் சென்றுள்ளதாகவும் வழியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு பின்புறத்தில் மேற்படி சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திவிட்டு இவர்களை வீதியில் வி;ட்டுச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

மறுநாள் அதிகாலை வீட்டைச் சென்றடைந்த மேற்படி சிறுவர்கள், நடந்தவற்றை உறவினரிடம் கூறியதைத் தொடர்ந்து மட்டக்களப்பு பொலிஸில் இது தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.கே.கே.குணசேகரவின் வழிகாட்டலில் சிறுவர் மற்றும் பெண்கள் பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி பெண்கள் உபபொலிஸ் பரிசோதகர் பிரியதர்சினி திஸாநாயக்க தலைமையில் சார்ஜன் சபேசன், பொலிஸ் கொஸ்தா மனோகரன் ஆகியோர் இணைந்து தலைமறைவான சந்தேக நபரை தேடி வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .