Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஏப்ரல் 28 , பி.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் சட்டவிரோதமான முறையில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர், நேற்று (27) கைதுசெய்யப்பட்டுள்ளாரென, வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தவலையடுத்து பிறைந்துறைச்சேனை பிரதேசங்களில் மேற்கொண்ட நடவடிக்கையின் போதே, குறித்த ஐஸ் ஹெரோய்ன் வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளனர்.
16 கிராம் நிறையுடைய 115 ஐஸ் போதைப்பொருள் பக்கெட்டுகள், சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர், போதைப்பொருள் வியாபாரம்தொடர்பில் இதற்கு முன்னரும் கைது செய்யப்பட்டவர்கள் என்றும், பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபர், நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதற்கு இணங்க மே மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.முஹமட் பஸீல் உத்தரவிட்டுள்ளார்.
48 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
59 minute ago