2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

117 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Editorial   / 2018 ஏப்ரல் 03 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள 117 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்துள்ளார்.  

காத்தான்குடி பிராதான வீதியிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக கழிவுகளை வைத்து பிரதான வீதியை அசுத்தப்படுத்தும் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராகவே, இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

காத்தான்குடி நகர சபையின் தலைவராக ​நேற்று (02) தமது கடமைகளைப்  பொறுப்பேற்றுக் கொண்ட​போதே, அவர் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X