2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

12 வயது சிறுமி துஷ்பிரயோகம்: இரு சிறுவர்கள் கைது

Editorial   / 2018 ஜூன் 29 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு- வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட,  மாங்கேணி பாம் கொலனி பிரதேசத்தில், 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட,  14, 15 வயதுகளையுடைய இரண்டு  சிறுவர்களை  இன்று (29)  வாகரை பாலிசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 12 ஆம் திகதி ஆடுகளை மேக்கச் சென்ற,  12 வயது சிறுமியை, அதேப் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த இரண்டு  சிறுவர்கள் அவரை பின்தொடர்ந்து சனநடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து பாலியல்  துஷ்பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பி ஓடியுள்ளனர்.

 

இந்த நிலையில் பாதிக்கபபட்ட சிறுமி பயம் காரணமாக வெளியில் தெரிவிக்காமல் இருந்து வந்துள்ள நிலையில் தனக்கு ஏற்பட்ட விபரீத நிலை தொடர்பாக நேற்று வியாழக்கிழமை (28) தெரிவித்ததையடுத்து, உறவினர்கள் உடனடியாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர் என,  பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து பொலிசார் சந்தேகத்தின் பேரில் 14,15 வயதுடைகளைடைய, இரண்ட சிறுவர்களை கைது செய்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X