2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

13 சிறுவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2014 மே 09 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


ஏறாவூரில் உள்ள ஆறுமுகத்தான்குடியிருப்பு அல்ஹிதாயா முன்பள்ளியில் வறுமைக்கோட்டுக்குட்பட்ட 13 சிறுவர்களுக்கு இலங்கை முஸ்லிம் உதவி நிறுவனம் புத்தகப் பைகள் மற்றும் சீருடைகளை வழங்கியுள்ளது.

உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வியாழனன்று ஏறாவூர் நகர உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.றமீஷா தலைமையில் இடம்பெற்றது.

ஆரம்ப சிறுவர் அபிவிருத்தி உதவியாளர் ஐ.எல்.நபீலா நிவாரண சகோதரி குறைஷா உட்பட இன்னும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கடந்தகால ஆயுத வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட விதவைகள் மற்றும் இலகுவில் பாதிக்கப்படக்கூடிய நலிந்த குடும்பங்களை இனங்கண்டு அந்தப் பின்னணியிலுள்ள சிறார்களுக்கு இந்த உதவிகளை வழங்கியதாக இலங்கை முஸ்லிம் உதவி நிறுவன மட்டக்களப்பு இணைப்பாளர் எம்.ஏ.எம்.அஸ்மி தெரிவித்தார்.

ஆக்கபூர்வமான பாலர் விளையாட்டு மற்றும் கற்பித்தல் முறைகள் சுமூகமாக இயங்குவதை உறுதி செய்யும் பொருட்டு, ஸ்ரீலங்கா முஸ்லிம் எயிட் நிறுவனம் 'அனைவருக்கும் கல்வி' என்ற திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாஞ்சோலையிலும் தாளங்குடாவிலும் நவீன வசதிகளுடன் கூடிய 2 முன் பள்ளிகளை அமைத்துக் கொடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X