2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

137 அபிவிருத்திகள் நிறைவு செய்ய வேண்டும்: ஹனீபா

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 04 , மு.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவில் அடுத்த 3 மாத காலப்பகுதியினுள் 137 அபிவிருத்தித்திட்டங்கள் நிறைவு செய்ய வேண்டியுள்ளதாக நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சால் முன்னெடுக்கப்படும் கிராமத்துக்கு ஒரு அபிவிருத்தித்திட்டத்தின் கீழ், 24 திட்டங்களுக்கு 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன்,   இந்த வேலைத்திட்டங்களில் ஒரு சில ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வியாழக்கிழமை (4)  அவர்  கூறினார்.

இதை விட, உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூத்தின் விசேட அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ், மேலும் 24 திட்டங்களுக்கு 1 கோடியே 50 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும்,  அமைச்சர் பஷீர் சேகுதாவூத்தின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவுத்திட்டத்தில் இந்த ஆண்டுக்கான ஒதுக்கீட்டிலிருந்து  உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட சிறிய திட்டங்களுக்காக 4 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கிழக்கு மாகாணசபையிலிருந்தும் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் மூலமாக 42 அபிவிருத்தி;த்திட்டங்களுக்கு 4 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஏறாவூர் நகரசபைத் தலைவர் அலிஸாஹிர் மௌலானாவின் முயற்சியின் காரணமாகவும் பல அபிவிருத்தித்திட்டங்கள் இப்பிரதேசத்தில் முன்னெடுக்கப்படுகின்றன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X