2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

148ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு சிரமதான பணி

Gavitha   / 2014 ஓகஸ்ட் 31 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


148ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இயங்கும் 164சி பிரிவு சிவில் பாதுகாப்பு குழுவின் ஏற்பாட்டில், காத்தான்குடி ஆற்றங்கரைப் பகுதி சனிக்கிழமை (30) சிரமதானத்தின் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.

காத்தான்குடி 4ஆம் கறிச்சி மற்றும் 3ஆம் குறிச்சி ஆற்றங்கரைப் பகுதியில் இந்த சிரமதான துப்பரவு செய்யும் பணி இடம்பெற்றது.

இச்சிரமதான நிகழ்வுக்கு காத்தான்குடி நகரசபை, காத்தான்குடி பொலிஸ், காத்தான்குடி குபா விளையாட்டு கழகம், (யூஸ்) கல்வி மற்றும் சமூகத்துக்கான ஒன்றியம் ஆகியவற்றின் உத்தியோகத்தர்களும் பிரதேச பொது மக்களும் ஒத்துழைப்புக்களையும், பங்களிப்பையும் வழங்கி இருந்தனர்.

சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்ட இப்பகுதியில் குப்பை கொட்டுவது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் அதை மீறுபவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காத்தான்குடி நகர சபையினால் அறிவித்தல் பதாதை ஒன்று இப்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X