2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

16 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புக்கான நிதியுதவி

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 15 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காங்கேயனோடைக் கிராமத்தில் சமுர்த்தி நன்மை பெறும் 16 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பை பெற்றுக்கொள்வதற்காக நிதியுதவிகள் திங்கட்கிழமை (14)  வழங்கப்பட்டன.

இதன்போது குடும்பம் ஒவ்வொன்றுக்கும் 5,480 ரூபா நிதியுதவி வழங்கப்பட்டது.

கிழக்கு மாகாண விவசாய கால்நடை கிராமிய கைத்தொழில் அமைச்சர் நசீர் அகமட்டின் ஏற்பாட்டில், காங்கேயனோடைக் கிராமத்தில் சமுர்த்தி நன்மை பெறும் குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பை பெற்றுக்கொள்வதற்கான நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இக்கிராமத்தில் குடிநீர் இணைப்பை பெறுவதற்காக ஏற்கெனவே 25 குடும்பங்களுக்கு நிதியுதவிகள் வழங்கப்பட்டன.

இதேவேளை, அங்காடி மீன் வியாபாரியொருவருக்கு 240,000 ரூபா பெறுமதியான மீன் விற்பனை செய்யும் வாகனமொன்றும் மற்றுமொரு மீனவருக்கு 30,000 ரூபா பெறுமதியான தோணியொன்றும்  6 மீனவர்களுக்கு மீன்பெட்டிகளும்  வழங்கப்பட்டன.

மேலும், காங்கேயனோடை விளையாட்டுக்கழகம், காங்கேயனோடை பதுறியா விளையாட்டுக்கழகம் ஆகியவற்றுக்கு 40,000 ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

காங்கேயனோடை ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலை மண்டபத்தில் மண்முனைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.மதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X