2026 மே 07, வியாழக்கிழமை

16 இலட்சம் ரூபா செலவில் பாலர் பாடசாலை

Kogilavani   / 2013 மே 14 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எஸ்.சசிக்குமார்


வவுணதீவு, புதுமண்டபத்தடியில் சிறுவர் நிதியத்தின் சுமார் 16 இலட்சம் ரூபா செலவில் சகல வசதிகளுடனும் கூடிய பாலர் பாடசாலை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று நடைபெறெ;றது.

வவுணதீவு அபிவிருத்தி நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் எல்.ஆர்.டிலிமா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மண்முனை மேற்கு வவுணதீவுப் பிரதேச செயலாளர் வெ.தவராஜா பிரதம விருந்தினராக கலந்துகொண்டு அடிக்கல்  நாட்டிவைத்தார்.

இந்நிகழ்வில் சிறுவர் நிதியத்தின் பிராந்திய முகாமையாளர் ஜே.பேர்னாட் பிரகாஸ் வவுணதீவுப் பிரதேச அபிவிருத்தி நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் கே.கஜன், அட்லஸ் திட்ட உத்தியோகஸ்தர் என்.நாகராஜா மற்றும் டி.ஜீ.எல்.சுபாஜன், வாழ்வாதார திட்ட உத்தியோகஸ்தர் ஐ.எல்.நஹிம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .