2025 மே 07, புதன்கிழமை

162 பேர் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இடத்தையும் ஆணைகுழு பார்வையிட்டது

Kanagaraj   / 2014 மார்ச் 23 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு குருக்கள்மடம் மற்றும் அம்பளாந்துறை ஆகிய பகுதிகளில்  வைத்து 12.07.1990 அன்று காத்தான்குடியைச் சேர்ந்த 162 பேர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் இடத்தினை காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினர் சனிக்கிழமை (22)  மாலை சென்று பார்வையிட்டனர்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் ஆணைக்குழுவிடம் விடுத்திருந்த வேண்டு கோளின் அடிப்படையில் காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு இந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டது.

காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பராக்கிரம பரணகம தலைமையில் அதன் உறுப்பினர்களான திருமதி காஞ்சனா வித்தியாரத்ன, திருமதி மனோ ராமநாதன் ஆகியோரும் குழுவின் சட்டத்தரணிகளும் அதிகாரிகளும் இந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

இந்த இடத்தினை பார்வையிட்ட ஆணைக்குழுவினர் இந்த இடம் மற்றும் கடத்தப்பட்டவர்களின் விபரங்களையும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக்கிடம் கேட்டறிந்து கொண்டனர்.

இதன் போது காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் உப செயலாளர் ஏ.எல்.இசட். பௌமி மற்றும் பள்ளிவாயல் சம்மேளன பிரதிநிதிகளான எம்.எச்.ஏ.பசீர், எம்.சாதுலி, ஏ.எல்.எம்.சாதிக் ஆகியோரும் சென்றிருந்தனர்.

குறித்த இடத்தினை தோண்டுமாறு கோரி காத்தான்குடி நகர சபை தவிசாளர் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திலும் ஏ.பி.எம்.றியாஸ் என்பவர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர். அதே போன்று கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் 19 பேர் கையொப்பமிட்டு மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு கடிதங்களை அனுப்பியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.




 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X