2025 மே 07, புதன்கிழமை

17 மகளிர் அபிவிருத்திச் சங்கங்கள் கௌரவிப்பு

Kogilavani   / 2014 மார்ச் 26 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-


மகளிர் சங்கங்களை கௌரவிக்கும் முறையில் புதன்கிழமை (26) ஏற்பாடு  செய்யப்பட்டிருந்த மகளீர்களை கௌரவிக்கும் நிகழ்வில் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் செயற்படும் 17 மகளிர் அபிவிருத்திச் சங்கங்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டன.

ஏறாவூர் நகர உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. றமீஷா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர் நகரபிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இங்கு உரையாற்றிய அவர்,

'சமூகத்துக்கான அடித்தளத்தை அமைக்கின்ற பெரும் பாத்திரத்தைப் பெண்கள் வகிக்கின்றார்கள். தனது குழந்தையை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்கின்ற நிகழ்ச்சி நிரலை கருவிலிருந்தே ஒரு தாய் கொண்டிருப்பாளானால் அந்த சமூகத்தின் தலைவிதி சிறப்பானதாக இருக்கும்.
அதன் மூலமாக சிறந்த ஆற்றலும் ஆளுமையும் உள்ள புத்தி ஜீவிகள் சமூகத்தில் உருவாகுவார்கள்' என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கோறளைப்பற்று மத்திய பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜுத், மட்டக்களப்பு மத்திய கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் இஷற், ஏ.நஸீரா, மாவட்ட செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சிவலிங்கம் உட்பட பலர்  கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X