2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

17 வயது சிறுவனை காணவில்லை

Gavitha   / 2014 நவம்பர் 09 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  மீராகேணியில் 17 வயது இளைஞனைக் காணவில்லை என்று ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக  ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர், மீராகேணி சந்தை வீதியைச் சேர்ந்த முனாப்தீன் முஹம்மத் முனாஸ் என்ற இளைஞன் கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக, காணாமல் போன சிறுவனின் தந்தையான  மீராஸாஹிப் முனாப்தீன் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (09) முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார்.

காணாமல் போன சிறுவன் கடைசியாக கொழும்புக்கு செல்வதற்காக ஏறாவூரில் தரித்து நின்ற புகையிரதத்தில் ஏறிச் சென்றதை, அவரது நண்பர்கள் கண்டதாக தகவல் கிடைத்ததாகவும் சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார்.

அவரது உறவினர்கள் வாழும் சம்மாந்துறை – மாவடிப்பள்ளி, ஓட்டமாவடி – நாவலடி மற்றும் மூதூர் இறங்குறைப் பகுதிகளில் தேடிய போதும் தனது மகனைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று இளைஞனின் தந்தை மேலும் கூறினார்.

இம்முறைப்பாடு தொடர்பாக தாம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X