2025 மே 03, சனிக்கிழமை

170 அபிவிருத்தி திட்டங்களுக்கு 96 மில்லியன் ஒதுக்கீடு

Super User   / 2013 ஒக்டோபர் 24 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வருடம் 170 அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்காக 96 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் சுகாதாரத்துடன் தொடர்புடைய 129 செயற்திட்டங்களும் சிறுவர் மேம்பாட்டுடன் தொடர்புடைய 19 திட்டங்களும் விளையாட்டுத்துறை அபிவிருத்திக்கான 13 செயற்திட்டங்களும், 5 சமூகசேவை திட்டங்களும் எட்டு சுதேசிய வைத்தியத்துறை திட்டங்களும், கூட்டுறவு அபிவிருத்திக்கான ஒரு செயற் திட்டமும் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மாவட்ட வைத்தியசாலைகள்,  தள வைத்தியசாலைகள் மற்றும கிராமிய வைத்தியசாலைகளுக்கு தேவையான வளங்களை பெற்றுக் கொடுப்பதற்கும் சுகாதார அலுவலகங்களின் வசதிகளை மேம்படுத்துவதற்கும் இதனுடாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X