2026 மே 09, சனிக்கிழமை

ரூ.1,760.16 மில்லியன் செலவில் மட்டக்களப்பில் அபிவிருத்தி திட்டங்கள்

Menaka Mookandi   / 2013 ஜூன் 16 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வருடத்தின் மே மாதம் வரையில் மாத்திரம், 3,654 அபிவிருத்தித் திட்டங்களுக்காக 1760.16 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

2013ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இந்த அபிவிருத்தி வேலைகள், பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, வெளிநாட்டு நிதிகள், கிழக்கு மாகாணசபை, ஏனைய அமைச்சுக்கள், தயட்ட கிருள (தேசத்துக்கு மகுடம்) வேலைத்திட்டம், தயாட்ட கிருள கணணி ஆய்வு கூடங்கள் என்ற வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவற்றில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் 2,588 அபிவிருத்தி வேலைகளும், ஆரம்பப்பாடசாலை அபிவிருத்தி, விவசாய சேவைகள் திணைக்களம், திவிநெகும, இந்திய வீட்டுத்திட்டம், புறநெகும, மீள் எழிச்சித்திட்டம் ஆகிய பிரதான திட்டங்கள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றுக்கென 1,821.51 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வெளிநாட்டு நிதிகளுடனான அபிவிருத்தி வேலைகளில் கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்தின் கீழ் வரும் இபார்ட் திட்டத்தின் ஊடாக 12 திட்டங்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் ஏ தர காபட் வீதிகள் மற்றும் பாலங்கள் அடங்கலான திட்டமும், ஜெய்க்கா திட்டத்தின் கீழ் பனிச்சங்கேணி, மண்முனைப்பாலம் ஆகிய திட்டங்கள் 1,704.8 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டிலும், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் வரும் கரையேரம் பேணல் திணைக்களத்தினால் 12 திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இவற்றுக்கென மொத்தமாக 2231.1 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அதே நேரம், கிழக்கு மாகாண சபையின் கீழ் வரும் திணைக்களங்களினால் நடைமுறைப்படுத்தப்படுமம் 195 திட்டங்களுக்கென 2,212.39 மில்லியன் ரூபாய்களும், ஏனைய அமைச்சுக்களின் கீழ் உள்ள திணைக்களங்கள் ஊடாக 126 அபிவிருத்தி வேலைகளுக்கா 376.03 மில்லியன் ரூபாய்களும், தயாட்ட கிருள கணணி விஞ்ஞான ஆய்வு கூடங்கள் 15க்கென த்துக்கென 30 மில்லியனும், தயாட்ட கிருள வேலைத்திட்டங்களின் கீழ் 703 அபிவிருத்தி வேலைகளுக்காக 1679.94 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .