2026 மே 09, சனிக்கிழமை

மீரா ஜும்ஆ பள்ளிவாயல் புனரமைப்பு

Kogilavani   / 2013 ஜூன் 06 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


யுத்தக்காலத்தின்போது  கடந்த 1990 ஆம் ஆண்டு படுகொலை இடம்பெற்ற காத்தான்குடி, முதலாம் குறிச்சி மீராஜும் ஆ பள்ளிவாயல் 23 வருடங்களுக்கு பின்பு புனரமைப்புச் செய்யப்படுகின்றது.

இந்த பள்ளிவாயலில் கடந்த 3.8.1990ஆம் ஆண்டு, இரவு இஷாத் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 103 பேர் தொழுகையில் வைத்து படுகொலை செய்யப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்தனர்

இந்த சம்பவத்தின்போது இந்த பள்ளிவாயலும் சேதமடைந்தது.

தற்போது இப்பள்ளிவாயல், பள்ளிவாயல் நிர்வாகிகளினால் புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த பள்ளிவாயலில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்தின் அடையாளங்கள் மற்றும் தடயங்கள் எதையும் அழிக்காமல் அதை அப்படியே வைத்து பள்ளிவாயல் புனரமைப்புச் செய்யப்படுவதாக பள்ளிவாயலின் செயலாளர் ஏ.ஜே.அனீஸ் அகமட் தெரிவித்தார்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .