2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

20 மாணவர்களுக்கு சான்றிதல் வழங்கும் நிகழ்வு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 31 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


க.பொத. சாதாரண தரப்பரீட்சையில் புலமை காட்டிய ஏறாவூரைச் சேர்ந்த 20 மாணவர்களுக்கு பாராட்டும் பரிசும் சான்றிதழும் வழங்கி வைக்கும் நிகழ்வு சனிக்கிழமை (30) ஏறாவூர் அல் அஷ்ஹர் மகளிர் உயர் தரப்பாடசாலையில் இடம்பெற்றது.

கடந்த டிசெம்பர் மாதத்தில் இடம்பெற்ற க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தின் ஏறாவூர் கோட்டத்தைச் சேர்ந்த 7 மாணவர்கள் 9 பாடங்களில் 'ஏ' தரச் சித்தியினையும், 13 மாணவர்கள் 8 பாடங்களில் 'ஏ' தரச் சித்தியினையும் பெற்று சிறப்புத் தேர்ச்சியடைந்திருந்தனர். இவர்களுக்கு இந்நிகழ்வில் கௌரவமும் பரிசும் வழங்கி வைக்கப்பட்டதாக 'ஷெட்' நிறுவனத்தின் தலைவர் கே. அப்துல் வாஜித் தெரிவித்தார்.

ஏறாவூர் 'ஷெட்' (Serving Huminity through Empowerment and Development) நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய கால் நடை உற்பத்தி அபிவிருத்தி, கிராமியக் கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி சுற்றுலாத்துறை அமைச்சர் நஸீர் அஹமட் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மேலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா, மட்டக்களப்பு மத்திய கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ். இஸ்ஸதீன், கோட்டக் கல்வி அதிகாரி ஐ.எல். மஹ்ரூப், ஏறாவூர் நகர சபை உறுப்பினர்களான ஐ. அப்துல் வாஸித், எம்.எல். ரெபு பாசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X