2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

ஏறாவூர் நகரசபை நகர பிதாவாக அலிசாகீர் மௌலானா நியமனம்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 23 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

ஏறாவூர் நகரசபையின் முதல் நகர பிதாவாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாகீர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிட்டு 9,601 வாக்குகளை பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார்.

ஏறாவூர் நகரசபையின் பிரதித் தலைவராக எம்.ஐ.தஸ்லீம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேசசபையின் தலைவராக கே.பி.எஸ்.ஹமீதும் பிரதித் தலைவராக ஏ.நௌபரும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சரும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .