2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

விவசாய கல்விச் சுற்றுலா

Kogilavani   / 2011 மார்ச் 24 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜவீந்திரா)

மட்டக்களப்பபு களுமுந்தன்வெளி ஸ்ரீ விக்னேஸ்வரா விவசாயிகள் அமைப்பிலிருந்து தொரிவு செய்யப்பட்ட 50 விவசாயிகளை யு.என்.டீ.பி. அமைப்பின் நிதியுதவியுடன் நாளை வெள்ளிக்கிழமை விவசாய கல்விச் சுற்றுலா ஒன்றுக்காக அழைத்துச் செல்லவுள்ளதாக களுமுந்தன்வெளி ஸ்ரீ விக்னேஸ்வரா விவசாயிகள் அமைப்பின் தலைவர் தெ.சிவபாதம் தெரிவித்தார்.

தமது விவசாய அமைப்புக்காக 20 இலட்சம் ரூபா நிதியினை வழங்கி அதன் மூலம் வீட்டுத்தோட்ட பயிர் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் 50 போரை இலங்கையின் மிகவும் பிரசித்தி வாய்ந்த வீட்டுத் தோட்ட செய்கைகளில் ஈடுபடும் தம்புல்ல,  மகியங்கனை,  கண்டி  போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று அனுபவப் பகிர்வினைப் பெற்றுக் கொடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .