2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

மோட்டார் சைக்கிள் திருடிய நபர் நீதிமன்றில் ஆஜர்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 25 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பு நகரிலுள்ள மாதா கோவிலுக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிளொன்றை  திருடினார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதான நபர்  இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மேற்படி சந்தேக நபர் கடந்த 20ஆம் திகதி  மோட்டார் சைக்கிளொன்றை திருடிய நிலையில், கடந்த 23ஆம் திகதி மட்டக்களப்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.  

இந்நிலையில், மட்டக்களப்பு பாலமீன்மடுவைச் சேர்ந்த டேவிட் நித்தியானந்தன் என்பவர் தனது மோட்டார் சைக்கிளை காணவில்லையென்று  மட்டக்களப்பு பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். பொலிஸார் மேற்கொண்ட விசாரணையைடுத்து குறித்த மோட்டார் சைக்கிள் முகத்துவாரத்தில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் ஒருவரை பொலிஸார் கைதுசெய்தனர்.  

குறித்த மோட்டார் சைக்கிளை விற்பனை செய்ய முற்பட்டபோது, மோட்டார் சைக்கிளுக்கான பதிவுச் சான்றிதழ் இல்லாமையால் 3000 ரூபாவிற்கு மேல் தர முடியாதென்று விட்டுச் செல்லப்பட்டது. இதனையடுத்து, மோட்டார் சைக்கிளை காத்தான்குடியில் விற்பதற்காக கொண்டு சென்றபோது மோட்டார் சைக்கிளில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக  முகத்துவாரத்தில் கைவிட்டுச் சென்றதாக சந்தேக நபரிடம் நடத்திய விசாரணையின்போது தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .