A.P.Mathan / 2011 ஏப்ரல் 14 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜவீந்திரா)
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த யுத்த சூழலாலும், இயற்கை, சுனாமி அனர்த்தங்களாலும் பாதிக்கப்பட்டு சுமார் 25,252 பெண்கள் கணவனை இழந்துள்ளனர்.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் புதுவருடத்தை முன்னிட்டு 1,750 விதவை பெண்களுக்கு மாவட்டத்தில் பரவலாக சேவை உதவியை வழங்கியுள்ளார். இதற்காக சுமார் 1,006,250 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
இவ்வேளை புதுக்குடியிருப்பு கிராமத்தில் 142 பேருக்கும், வாழைச்சேனையில் 94 பேருக்கும், பேத்தாழையில் 182 பேருக்கும், கல்மடு, விநாயகபுரம், மருதநகர், ஜீவநகர் ஆகிய கிராமங்களில் 186 பேருக்கும், கல்குடா, பாசிக்குடா, பட்டியடிச்சேனை ஆகிய கிராமங்களில் 119 பேருக்கும், கண்ணகிபுரத்தில் 152 பேருக்கும் மொத்தம் 875 சேலைகள் இக்கிராமத்தின் அனைத்து கணவனை இழந்தவர்களுக்கும் வழங்கப்பட்டதுடன் மிகுதி 875 சேலைகள் ஏனைய கிராமங்களில் மிகவும் வறிய கணவனை இழந்த தாய்மார்களுக்கு பரவலாக விநியோகிக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், கிழக்கு இந்து ஒன்றியத் தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் நேரடியாக சென்று மக்களுக்கு இவ்வுதவியை வழங்கி வைத்தார்.
இவ்வேளை 120 ஆண்களுக்கும் சாரன் உதவிகள் புதுவருடத்தை முன்னிட்டு நாடாளுமன்ற உறுப்பினரால் வழங்கப்பட்டது. 23 வறிய பெற்றோரை இழந்த பல்கலைக் கழக மாணவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் புதுவருட உடைகள் கொள்வனவுக்காக 3,000 ரூபா வீதம் வழங்கியுள்ளார்.
சில இடங்களில் வறிய குடும்பங்களுக்காக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையால் உலர் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.
இவ்வேளை சொந்த மண்ணில் துன்புறும் தமிழ் மக்களின் துயர் நீங்க இப்புதுவருடத்தில் பிரார்த்திக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் தமிழ் மக்களிடம் வேண்டுதல் விடுத்துள்ளார். புதுவருட உதவிகள் இந்து, கிறிஸ்தவ மக்களுக்கு விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
11 minute ago
20 minute ago
26 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
20 minute ago
26 minute ago
37 minute ago