Super User / 2011 ஏப்ரல் 16 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஆர்.அனுருத்தன்)
மட்டக்களப்பு, கிண்னையடி வாழைச்சேனையில் வெள்ளிக்கிழமை இரவு ஆலய பூசகர் ஒருவரின் தற்காலிக கொட்டில் வீடு இனம் தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
கிண்னையடி பிள்ளையார் கோயில் பூசகரான புலேந்திர ரூபசர்மா என்பவரின் வீடே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் அதிலிருந்த பலபொருட்கள் நாசமாக்கப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனைப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் நடந்த அன்றிரவு மாகான சுகாதார அமைச்சர் புதுவருட பன்டிகைக்காக பூசகரின் இல்லத்திற்குச் சென்று திரும்பிய பின்பு இச்சம்பவம்; இடம் பெற்றுள்ளது.
இச்சம்பவம் குருமார்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியத்தின் செயலாளர் க.கு.லோகநாதன் குருக்கள் தெரிவித்துள்ளார்.
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago