Menaka Mookandi / 2011 ஏப்ரல் 19 , மு.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜதுசன்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் பால் உற்பத்தி ஓரளவு அதிகரித்துள்ளதாக மாவட்ட கால்நடை அபிவிருத்தி பால் உற்பத்தி நிலைய பிராந்திய முகாமையாளர் கே.கனகராஜா தெரிவித்தார்.
மாவட்டத்தின் பால் உற்பத்தியானது நாள் ஒன்றிற்கு 8,900 லீற்றர் ஆக உள்ள நிலையில் தற்போது மாவட்டத்தில் இயங்கும் 7 நிலையங்கள் ஊடாக 7ஆயிரம் லீற்றர் பெறப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த வெள்ளத்தினால் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் கடந்த மாதம் நாள் ஒன்றிற்கு 1000 லீற்றர் பெறப்பட்ட நிலையில் இம்மாதம் 7000 லீற்றர் கிடைப்பது பால் உற்பத்தி வளர்ச்சியைச் கண்டுள்ளது என்றார்.
மேய்ச்சல்தரை தற்போது போதியளவு உள்ளமையே பால் உற்பத்தி அதிகரிப்பிற்குக் காரணம் என கே.கனகாஜா மேலும் தெரிவித்தார்.
19 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
44 minute ago