Super User / 2011 ஏப்ரல் 19 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி)
கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை தொடர்பாக ஆராய்வதற்காக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க நாளை புதன்கிழமை கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தன.
இதேவேளை, காலவரையறையின்றி மூடப்பட்ட கிழக்கு பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகம் இன்று செவ்வாய்க்கிழமை மீள திறக்கப்பட்ட போதிலும் மாணவர்களின் வரவு குறைவாக காணப்பட்டதாக அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டன.
கடந்த 30ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களிடையே ஏற்பட்ட சர்ச்சையினால் மாணவர்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்திலுள்ள பொலிஸாரை அகற்றுமாறு கோரி நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தையடுத்து பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டது.
எனினும் கல்வி நடவடிக்கைகளுக்காக கிழக்கு பல்கலைக்கழகம் மீண்டும் இன்று திறக்கப்பட்டது. ஆனால் மாணவர்களின் வரவு குறைவாகவே காணப்பட்டது என பல்கலைக்கழக வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
இதேவேளை, மாணவர் ஒன்றியம் அறிவிக்கும் வரை விரிவுரைகளுக்கு சமுகமளிக்க வேண்டாம் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் ஜி.கிருஷ்ணகாந் கையொப்பமிட்டு ஊடகங்களுக்கு அனுப்பிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, நேற்று திங்கட்கிழமை கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு இன்று செவ்வாய்க்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
19 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
44 minute ago