2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

மீள இயங்கவுள்ள மட்டு. மாவட்ட உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 20 , மு.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜவீந்திரா)    

சுனாமிக்கு முன்னர் ஊடகத்துறையில் பல பயிற்சிநெறிகளையும் விழிப்புணர்வுக் கருத்தரங்குகளையும் மேற்கொண்டு வந்த மட்டக்களப்பு மாவட்ட உழைக்கும்; பத்திரிகையாளர்கள் அமைப்பு  மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது.

இவ் அமைப்பு செயலிழந்து போயிருந்த நிலையில், இதனை மீண்டும் இயங்கச் செய்ய வேண்டுமென்ற நோக்கத்துடன் ஊடகத்துறையில் முழுநேரமாகப் பணியாற்றுகின்ற மட்டக்களப்பு  மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் ஒன்றுகூடி கலந்துரையாடினர்.

இவ்வமைப்பில் இணைந்து கொள்ள விரும்பும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த முழுநேர ஊடகவியலாளர்கள் தலைவர் ரீ.எல்.ஜௌபர்கான் 34 ஏ, மத்திய வீதி, காத்தான்குடி - 4  என்ற  முகவரிக்கு தங்களது விபரங்களை அனுப்பிவைக்கவும். மேலதிக விபரங்களுக்கு 065-247044 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

நிர்வாகசபை தெரிவு செய்யப்பட்ட நிலையில் தலைவராக ரீ.எல்.ஜௌபர்கான், உபதலைவராக வரதராஜன், செயலாளராக எஸ்.தேவஅதிரன், பொருளாளராக கே.ஜனோசினி, நிர்வாகசபை உறுப்பினர்களாக சீ.பீ.ஹரிச்சந்திரன், பி.கிருஷ்ணகுமார், ஊடகஇணைப்பாளராக ஏ.எச்.ஹுசைன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .