2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் இறால் வளர்ப்பை அபிவிருத்தி செய்வது தொடர்பான செயலமர்வு

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 21 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் இறால் வளர்ப்பை  அபிவிருத்தி செய்வது தொடர்பான செயலமர்வொன்று இன்று  தேசிய நீர் உயிரின வளர்ப்பு அதிகார சபையினால் நடத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இறால் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மட்டக்களப்பில் இறால் வளர்ப்பிற்கு உகந்ததாகக் காணப்படும் சுமார் 2,000 ஏக்கரில் இறால் வளர்ப்பை மேற்கொள்ளல், அரச காணிகளை நீண்டகால குத்தகை அடிப்படையில் இறால் வளர்ப்பில் ஈடுபாடுடையவர்களுக்கு பகிர்ந்தளித்து அதனூடாக இறால் வளர்ப்பை அபிவிருத்தி செய்தல் போன்ற விடயங்கள் பற்றி ஆராயப்பட்டன.

மட்டக்களப்பு இறால் பண்ணையாளர்களின் நன்மை கருதியும் மட்டக்களப்பில் இறால் வளர்ப்பை அபிவிருத்தி செய்யவும் வருடாந்தம் 20 இலட்சம் இறால் குஞ்சுகளை உற்பத்தி செய்யக்கூடியதாக புதுக்குடியிருப்பில் 20 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டுள்ள இறால் குஞ்சு பொரிப்பகம் எதிர்வரும் மே மாதம் முதல் செயற்படவுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

மட்டக்களப்பு அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில் தேசிய நீர் உயிரின வளர்ப்பு அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பி.என்.சந்திரரத்ன, இறால் பண்ணையாளர்களும் கலந்து கொண்டனர். நீர் உயிரின வளர்ப்பு நிபுணர் எஸ்.தயாபரன், பணிப்பாளர் நாயகம், உதவிப் பணிப்பாளர் ஜே.ஏ.அத்துல, மட்டக்களப்பு பிராந்திய பணிப்பாளர் ரி.ரவிக்குமார் ஆகியோர் விரிவுரையாற்றினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .