2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

துப்பாக்கி தூக்கிய கைகளால் பேனாவைப்பிடிக்க வைத்தவர் ஜனாதிபதி மஹிந்த: கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் வ

Super User   / 2011 ஏப்ரல் 23 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

'முப்பது ஆண்டுகளாக துப்பாக்கி தூக்கியவர்களை பேனாவையும் புத்தகத்தையும் தூக்கும் நிலைக்கு கொண்டுவந்தவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள். இவ்வாறானதொரு   சூழ்நிலையினால் இன்று கிழக்கு மாகாணத்தில் அச்சமின்றி சகல இன மக்களும் நிம்மதியான சூழலில் கல்வி பயிலக்கூடிய நிலைமை உருவாகியுள்ளது'
இவ்வாறு கிழக்கு மானாண கல்வி கலாசார போக்குவரத்து அமைச்சர் விமரவீர திசாநாயக்கா தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதேசத்தின் முதலாவது பாடசாலையான அல்ஹிறா மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றபோது விசேட அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

பாடசாலை அதிபர் எம்.ஏ.சீ.பதுர்தீன் தலைமையில ;நடைபெற்ற வைபவத்தில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உட்பட கல்வியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலாசார நிகழ்சிகளும் இடம் பெற்றன.
சிறந்த மாணவர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டன்'ர்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .