Super User / 2011 ஏப்ரல் 23 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜதுசன்)
கோட்டைக்கல்லாறில் மட்டக்களப்பு கல்முனை பிரதான நெடுஞ்சாலையில் சற்றுமுன் இடம்பெற்ற வீதி விபத்தில் நால்வர் காயமடைந்தனர்.
பிக்கப் வண்டியும் முச்சரக்கர வண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதால் சம்பவம் இடம்பெற்றதுடன் முச்சக்கர வண்டி பலத்த சேதத்துக்குள்ளானது.
காயமடைந்தோர் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
கடந்த 3 மாத காலத்தில் மட்டக்களப்பு கல்முனை பிரதான நெடுஞ்சாலையில் பல விபத்துக்கள் இடம்பெற்றதுடன், சிலர் இறந்தும், பலர் காயமடைந்துடன் வாகனங்கள் பல சேதத்துக்குள்ளாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வீதி போக்குவரத்து விதிகளை மீறல், அதி வேகமாக வாகனம் செலுத்தல், மதுபோதையில் வாகனம் செலுத்தல், தலைக்கவசமின்றி பயணம் செய்தல் போன்றனவே விபத்துகள் அதிகரிப்பதற்கான பிரதான காரணங்களாகும்.
19 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
44 minute ago