2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

மட்டு. மாநகர முதல்வர், உறுப்பினர்களை பொலிஸாரால் கைதுசெய்ய முடியுமா?: மாகாணசபை உறுப்பினர் மாசிலாமணி

Menaka Mookandi   / 2011 மே 02 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குள் வீதிகளில் குப்பை போடும் பொதுமக்களை கைதுசெய்து சட்ட நடவடிக்கை எடுக்கும் பொலிஸார், வடிகான்களைத் துப்பரவு செய்யாது டெங்கு நுளம்பு பெருக காரணமாக இருக்கும் மாநகர முதல்வரையும் உறுப்பினர்களையும் எப்போதாவது கைது செய்து சட்ட நடவடிக்கை எடுப்பார்களா என ஐக்கிய தேசியக் கட்சியின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ரி.மாசிலாமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குள் வீதியில் குப்பை போட்டதாக பலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். குப்பை போட்டதற்காக பொதுமக்களை கைது செய்ய முடியுமென்றால் மாநகர சபை எல்லைக்குள் நுளப்பு பெருக காரணமாக இருக்கும் மாநகர முதல்வரையும் உறுப்பினர்களையும் ஏன் பொலிஸார் கைது செய்ய முடியாது?

மட்டக்களப்பு மாவட்டத்தின் வீதி அபிவிருத்திப் பணியின் போது வடிகான்கள் அமைக்கப்பட்டது. மாநகர எல்லைக்குள் அமைக்கப்பட்ட வடிகான்களில் அவை அமைக்கும் போது போடப்பட்ட கல், மண், ஏனைய பொருட்கள் இதுவரை மாநகர சபையால் துப்பரவு செய்யப்படவில்லை.

இதனால் வடிகான்களில் இருந்து நீர்வடிய முடியாமல் தேங்கியுள்ளது. இதனால் நுளம்புகள் பெருகிக் காணப்படுகின்றன. துர்நாற்றமும் வீசுகின்றது.
 
இவ்வாறு டெங்கு நுளம்பு பெருகவும் சூழல்  மாசடையவும் காரணமாக இருக்கும் மாநகர மேயரையும் அதன் உறுப்பினர்களையும் கைது செய்து முதலில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை பொலிஸார் செய்வார்களா?' என்றும் கேள்வி எழுப்பினார்.


  Comments - 0

  • kamal Friday, 20 May 2011 06:32 PM

    இவங்க பதவிக்கு வந்ததே உழைகத்தான்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .