Suganthini Ratnam / 2011 மே 03 , மு.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜவீந்திரா)
சட்ட ரீதியாகவும் சட்ட ரீதியற்ற முறையிலும் வெளிநாடுகளுச்கு சென்றவர்களிடமிருந்து இதுவரையில் தொடர்பு அற்ற நிலையிலுள்ள உறவினர்கள் அவர்களின் விபரங்களை தங்களுக்கு அறிவிக்கும் பட்சத்தில் தாம் உரிய நாடுகளின் தூதுவராலயங்களுடன் தொடர்புகொண்டு உரிய தீர்;வை பெற்றுத்தர எம்மாலான சகல முயற்சிகளையும் மேற்கொள்வோமென மட்டக்களப்பு மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பலர் முகவர்கள் மூலமாக இலட்சக்கணக்கில் செலவு செய்து ஜரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார்கள். இவ்வாறு வெளிநாடுகளுக்கு சென்றுள்ள பலருடன் குடும்பத்தவர்களுக்கு பல வருடங்களாக தொடர்பு இல்லை.
இந்த நிலையில், தமது உறவினர்கள் உலகத்தில் எங்குள்ளார்களென்று எவராவது அறிப்பார்களா? என வெளிநாடுகளுக்கு சென்றுள்ளவர்களின் சொந்தங்கள் ஏங்கித் தவிக்கின்றனர்.
இந்த விடயம் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
58 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
6 hours ago