Super User / 2011 மே 03 , மு.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி)
ஐரோப்பிய யூனியனின் நிதியுதவியுதவியுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஐரோப்பிய யூனியனின் இலங்கை திட்டத்திற்கான தலைவர் வில்லி வண்டன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் உதயகுமார் உட்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் ஐரோப்பிய யூனியனின் நிதியுதவியுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாகவும் மற்றும் நீண்டகால வேலைத்திட்டங்கள் பொருளாதார திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
.jpg)
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago