2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

டெங்கு நுளம்புப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கை

Suganthini Ratnam   / 2011 மே 04 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

மட்டக்களப்பு, கோறளைப்பற்று மத்தி பிரதேச சுகாதார வைத்திய அலுவலகப் பிரிவிற்குள் வேகமாகப் பரவி வரும் டெங்கு நுளம்புப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் இன்று புதன்கிழமை அதிகாலை 05.30 மணி முதல் புகை விசுரப்பட்டு வருகின்றது.

மாவடிச்சேனை, செம்மண்ணோடை கிராம சேவகர் பிரிவுகளில் முதற்கட்டமாக புகை விசுரப்படுகிறது. அனைத்துக் கிராமங்களிலும் அதிகாலை 05.30 மணி முதல் காலை 08.00 மணி வரையும் மாலை 04 மணி முதல் இரவு 08.00 மணி வரையும் புகை விசுரப்படுமென கோறளைப்பற்று மத்தி பிரதேச சுகாதார வைத்திய அலுவல பதில் மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எம்.எஸ்.நௌபர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .