2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

ஆசிய அபிவிருத்தி தூதுக்குழு மட்டக்களப்பிற்கு விஜயம்

Kogilavani   / 2011 மே 04 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)
ஆசிய அபிவிருத்தி வங்கியின் பங்களாதேஷ் நாட்டுத்தூதுக்குழு வொன்று இன்று மட்டக்களப்புக்கு விஜயம் செய்தது.

மட்டக்களப்பு மாவட்ட செலயத்திற்கு சென்ற இத் தூதுக்குழு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மற்றும் அதிகாரிகளை சந்தித்ததுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் நெக்டப் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் வாழ்வாதார நிலையங்கள் என்பவற்றை இக்குழுவினர் பார்வையிட்டனர்.

ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இளைஞர் வள நிலையம் மற்றும் பாலமுனை கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டம், மற்றும் மட்டக்களப்பு புதூர் ஓட்டமாவடி ஆகிய பிரதேசங்களுக்கும் இக்குழு சென்று திட்டங்களை பார்வையிட்டது.

இத்தூதுக் குழுவில் திருமதி.பிர்தௌஸி சுல்தான் பேகம் உட்பட ஆறு பேர் இடம்பெற்றனர்.

பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களை இக்குழு குறிப்பாக பார்வையிட்டதுடன் அதில் சம்பந்தப்பட்ட பெண்களுடனும் கலந்துரையாடியது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .