2026 மே 13, புதன்கிழமை

dd

2012ஆம் ஆண்டு கலாசார விழா தொடர்பான கூட்டம்

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 17 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக கலாசாரப் பிரிவினால் 2012ஆம் ஆண்டுக்கான கலாசார விழா நடத்துவது தொடர்பான ஆரம்பக்கூட்டம் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலயத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதேச கலாசார விழாவை முன்னிட்டு வருடாவருடம் வெளிவரும் சிறப்புமலரை இம்முறை வாழை என்ற பெயரில் பிரதேசத்தின் முக்கிய இடங்களை உள்ளடக்கி இறுவெட்டாக வெளியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கலாசாரப் பேரவைக்கு ஒரு குழுவும்  வெளியீட்டுக்கு என்று ஒரு குழுவும் தெரிவுசெய்யப்பட்டன.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் எம்.எச்.எம்.நியாஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதேச செயலாளர், பிரதேச எழுத்தாளர்கள், கலை ஆர்வலர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .