2026 மே 14, வியாழக்கிழமை

விவேகானந்தர் சிலையை சேதப்படுத்திய சம்பவம்; சந்தேகநபர் பிணையில் விடுதலை

Menaka Mookandi   / 2012 ஜனவரி 31 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

ஆரையம்பதியில் சுவாமி விவேகானந்தர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கடந்த 26ஆம் திகதி காத்தான்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று செவ்வாய்க்கிழமை, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த இந்நபரை கடந்த 27ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
 
இன்று இச்சந்தேகநபர், சரீரப்பிணையிலும் பத்தாயிரம் ரூபா ரொக்கப்பிணையிலும் விடுதலை செய்ய மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிவான் உத்தவிட்டார்.  கடந்த 10ஆம் திகதியன்று ஆரையம்பதி எல்லையில் வைக்கப்பட்டிருந்த சுவாமி விவேகானந்தரின் உருவச்சிலை இனந்தெரியாதோரினால் சேதப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .