Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 01 , மு.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.லோஹித்,ஆர்.அனுருத்தன்)
தொற்றாத நோய்களில் இருந்து பொதுமக்களை காக்கும் நோக்கில் 24 மணிநேரமும் செயற்படக்கூடிய வகையில் ஆரோக்கிய நிலையங்களை நாடுபூராகவும் உள்ள வைத்தியசாலைகளில் சுகாதார அமைச்சு திறந்து வைத்துள்ளது. இதற்கான திறப்பு விழா மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள வைத்தியசாலைகளில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சர் கு.சுகுணன் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர், மட்டக்களப்பு மாவட்ட சுகாதார பணிப்பாளர் சதுர்முகம், உதவிப் பணிப்பாளர் ரகுமான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறாவது தொற்றாத நோயை தடுக்கும் நிலையமாக திறக்கப்பட்டுள்ள இந்நிலையத்தின் மூலம் ஒரு தனி மனிதனின் சுகவாழ்வு தொடர்பில் அக்கறை செலுத்தும் இலங்கை அரசின் சுகாதார சாதனையின் ஒரு நடவடிக்கை என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார். தொற்றாத நோய்களான நீரிழிவு, இரத்த அழுத்தநோய், புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகளும் அவற்றுக்கான ஆலோசனைகளும் இந்த நிலையம் மூலம் வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் சுபைர், மாவட்ட சுகாதார பணிப்பாளர் சதுர்முகம் ஆகியோர் சுகாதாரத்துறைக்கு ஆற்றிவரும் சேவையினை முன்னிட்டு பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்
இதேவேளை, மட்டக்களப்பு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை பொதுமக்களின் நலன் கருதி ஆரோக்கியவள நிலையப் பிரிவு திறந்துவைக்கப்பட்டது.
வைத்திய அத்தியட்சகர் எஸ்.தட்சணாமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் தொற்றாநோய் தடுப்பு வைத்திய நிபுணர் டாக்டர் அநுரஜெயசிங்க, டாக்டர்,இ.நவலோஜிதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago