Kogilavani / 2012 பெப்ரவரி 01 , மு.ப. 08:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜவீந்திரா)
மட்டக்களப்பு மாவட்டத்தில்; மேய்ச்சல் தரையில் வளர்க்கப்படும் கால் நடைகள் மாடுகள் முதலியன துப்பாக்கிச் சூட்டுக்கு இரையாக்கப்படுவதாக கால்நடை வளர்ப்போர் கவலை தெரிவித்துள்ளனர்.
இதுவரையில் 50 மாடுகள் துப்பாக்கிச் சூட்டினால் இறந்துள்ளதுடன் 150 இற்கு மேற்பட்ட மாடுகள் காயமடைந்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் வருடாந்தம் பெரும்போக வேளாண்மைச் செய்கைக் காலமான ஐப்பசி மாதம் முதல் தை, மாசி மாதங்கள் வரை மட்டக்களப்பு - அம்பாரை மாவட்டத்தின் எல்லை பிரதேசங்களான கெவுளியாமடு, மங்களகம, திவுலானை, கச்சக்கொடி, நவகிரி, போன்ற பிரதேசங்களில் தங்களது கால் நடைகளை வளர்த்து வருவது வழக்கம்.
அதேப்போன்று இவ்வருடமும் தமது கால்நடைகளை வளர்த்து வரும் வேளையில் துப்பாக்கிச் சூட்டினால் மாடுகள் பாதிக்கப்படுவதாகவும்; இவை யாரால் மேற்கொள்ளப்படுகின்றது என்பது தொடர்பில் அறிய முடியாத நிலையில் உள்ளதாகவும் கால்நடை வளர்ப்போர் சர்பாக
சுப்பிரமணியம்-ரஞ்சன் என்பவர் தெரிவித்துள்ளார்.
இதனால் தாம் பெரும் நஷ்டங்களை எதிர்கொண்டுள்ளதாக கால்நடை வளர்ப்பாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதேச செயலாளர் பிரதேச சபைத் தவிசாளர் போன்றேரிடமும் தாம்முறையிட்டுள்ளதாக அவர் மேலும் தொரிவித்தார்.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago