2026 மே 14, வியாழக்கிழமை

dd

காணிப்பிரச்சினைகளை ஆராய்வதற்கு உயர்மட்டக்குழுக்கள் அமைக்க கிழக்கு மாகாண சபை தீர்மானம்

Kogilavani   / 2012 பெப்ரவரி 01 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

கிழக்கு மாகாணத்திலுள்ள காணிப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கும் அதை தீர்த்து வைப்பதற்குமாக உயர் மட்ட குழுக்களை நியமிப்பது என நேற்று கிழக்கு மாகாண சபை அமர்வின் போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபை அமர்வு நேற்று மாகாண சபையின் தவிசாளர் எம்.எச்.எம்.பாயிஸ் தலைமையில் இடம்பெற்ற போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் காணிப்பிரச்சினை தொடர்பில் சுட்டிக்காட்டியதுடன் அதை தீர்த்துவைப்பதற்கான அவசியம் குறித்தும் எடுத்துக் கூறினர்.

இதையடுத்து கிழக்கு மாகாண மட்டத்தில் மாகாண காணி ஆணையாளர், மற்றும் முதலமைச்சர் மாகாண அமைச்சர்கள் மாகாண காணி திணைக்கள அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றும் நியமிப்பதுடன் கிழக்கு மாகாணத்திலுள்ள 3 மாவட்டங்களிலும் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்கள் காணி அதிகாரிகள் உள்ளடங்களாக மாவட்டங்களுக்கு தனித்தனி குழுக்களை நியமிப்பதென தீர்மானிக்கப்பட்டதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் யு.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.

கடந்த 11ஆம்  திகதியன்று நடைபெற்ற கிழக்கு மாகாண சபை அமர்வின் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் முபீன் கிழக்கு மாகாணத்திற்கான காணி அதிகாரங்களை மத்திய அரசு மாகாண சபைக்கு வழங்க வேண்டுமெனவும் தற்போது கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காணிப்பிரச்சினை தொடர்பில் தெளிவான முடிவுகள் எடுக்கப்படல் வேண்டுமெனவும் தெரிவித்து பிரேரணையொன்றை சமர்ப்பித்திருந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .