2026 மே 14, வியாழக்கிழமை

மட்டு. அரசடி சந்தி நூலகம் மாநகர சபையிடம் கையளிப்பு

Super User   / 2012 பெப்ரவரி 01 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித், ஜிப்ரான், எம்.சுக்ரி)

பாதுகாப்பு படையினரின் முகாமாக கடந்த 30 வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வந்த மட்டக்களப்பு அரசடி சந்தியிலுள்ள பொது நூலகம் இன்று புதன்கிழமை உத்தியோகபூர்வமாக மட்டக்களப்பு மாநகர சபையிடம் கையளிக்கப்பட்டது.

கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் பொலிஸாரினால் பயன்படுத்தப்பட்டு வந்த குறித்த நூலகத்திலிருந்து பொலிஸார் வெளியேறியதையடுத்தே மட்டக்களப்பு மாநகர சபையிடம் கையளிக்கப்படடுள்ளது.

குறித்த பொலிஸ் சாவடி பொறுப்பதிகாரி மட்டக்களப்பு மேயர் சிவகீதா பிரபாகரனிடம் கையளித்தார்.

யுத்தம் காலத்தில் படையினரின் முகாமாக பாவிக்கப்பட்டு வந்த இக்கட்டிடம்,  2004ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சமாதான உடன்படிக்கையினையடுத்து பொலிஸ் சாவடியாக மாற்றப்பட்டது. (படங்கள்:ஜிப்ரான்)


  Comments - 0

  • Iya Saturday, 04 February 2012 11:22 PM

    ஆசியாவின் அதிசயம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .