2026 மே 14, வியாழக்கிழமை

dd

மட்டு. மாவட்டத்தில் நாளை மின்வெட்டு

Super User   / 2012 பெப்ரவரி 01 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான், எம்.சுக்ரி)

இலங்கை மின்சார சபையின் மட்டக்களப்பு அலுலகத்தின் திருத்த வேலைகள் காரணமாக நாளை வியாழக்கிழமை காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை  மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு மின் பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்தது.

இதற்கிணங்க செங்கலடி, கொடுவாமடு,  தம்பானம்வெளி, பங்குடாவெளி, இலுப்படிச்சேனை, கரடியனாறு,  மரப்பாலம், இராஜபுரம், கித்துல், கோப்பாவெளி, தும்பாலஞ்சோலை, பெரிய புல்லுமலை, ஆயித்தியமலை மற்றும் உன்னிச்சை ஆகிய இடங்களிலேயே   மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு மின் பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்தது.

இதேவேளை, ஆரையம்பதி மற்றும் காங்கேயனோடை பிரதேசங்களிலும் ஏறாவூர் பிரதேசத்திற்குட்பட்ட ஓட்டுப்பள்ளி வீதி, ஆர்.சி வீதி, அரபா வித்தியாலய வீதி மற்றும் இளையவன்போடி வீதி ஆகிய இடங்களில் நாளை வியாழக்கிழமை ஐந்து மணி நேர மின் வெட்டு இடம்பெறும் என இலங்கை மின்சார சபையின் காத்தான்குடி அலுவலக மின் அத்தியட்சகர் ஏ.எல்.மாஹீர் தெரிவித்தார்.

திருத்த வேலை காரணமாக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இந்த மின் வெட்டு இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .