2026 மே 14, வியாழக்கிழமை

dd

பேராசிரியர் சாண்டோ சி.சங்கரதாஸ், சாண்டோ ஸ்ரீதாஸ் ஆகியோரின் உருவச் சிலைகள் திறப்பு

Super User   / 2012 பெப்ரவரி 01 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

பேராசிரியர் சாண்டோ சி.சங்கரதாஸ் மற்றும் சாண்டோ ஸ்ரீதாஸ் ஆகியோரின் உருவச் சிலைகள் இன்று புதன்கிழமை ஆரையம்பதி பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டன.

பேராசிரியர் சாண்டோ சி.சங்கரதாஸ் மற்றும் சாண்டோ ஸ்ரீதாஸ் நினைவு பணிமன்றத்தின் ஏற்பாட்டில் இந்த உருவச்சிலைகளை ஆரையம்பதி கிராம நீதிமன்ற வீதியில் திறந்துவைக்கப்பட்டன.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.தங்கேஸ்வரி தலைமையில் நடைபெற்ற உருவச்சிலைகள் திறந்து வைக்கும் நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச சபையின் தலைவி மேரி கிறிஸ்டினா சசிகரன் உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர்.

இதன் போது இவ் உருவச்சிலைகள் திறந்து வைக்கப்பட்டதுடன் நினைவுக்கல்லும் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .