2026 மே 14, வியாழக்கிழமை

மாவடிமுன்மாரி பிரதேசத்தில் ரவைகள் மீட்பு

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 02 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவடிமுன்மாரி பிரதேசத்தில் ஒருதொகை துப்பாக்கி ரவைகள் நேற்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

தங்களுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து   மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது வயல்நிலப் பகுதியிலிருந்து இந்த ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் 2 பிளாஸ்ரிக் கலன்களில் சுமார் 700 ரவைகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் கொக்கட்டிச்சோலை பொலிஸார் கூறினர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டு பகுதியாக இருந்த இப்பிரதேசத்தில் அவர்களின் காலத்தில் இந்த ரவைகள் மறைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .