Menaka Mookandi / 2012 பெப்ரவரி 02 , மு.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சவூதி அரேபியா வைத்தியர்களின் கண் பரிசோதனை மற்றும் கண் சத்திரசிகிச்சை முகாம் இன்று வியாழக்கிழமை காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஹிஸ்புல்லாஹ் பௌன்டேஸன் நிறுவனத்தினால் சபாப் மற்றும் சவூதி அரேபியாவிலுள்ள அல் பசர் நிறுவனங்களின் உதவியுடன் இந்த கண் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றது.
இன்றைய இதன் ஆரம்ப வைபவத்தில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் சவூதி அரேபியாவின் வைத்தியர் டாக்டர் அலிசியா மற்றும் சபாப் நிறுவனத்தின் முக்கியஸ்;தர் மிர்சூக் பஸ்லி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் உட்பட வைத்தியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கண் பரிசோதனை மற்றும் சத்திரசிகிச்சை முகாம் தொடர்ந்து ஐந்து தினங்களுக்கு நடைபெறவுள்ளது.

4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago