2026 மே 14, வியாழக்கிழமை

dd

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புறக் கிராமங்களுக்கு எம்.பி அரியேந்திரன் விஜயம்

Kogilavani   / 2012 பெப்ரவரி 03 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா)

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புறக் கிராமங்களுக்கு மட்டக்களப்பு மாவட்டதமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் விஜயம் ஒன்றினை நேற்று வியாழக்கிழமை  மேற்கொண்டார்.

35,37,39,ஆம் கொலனி, கெவுளியாமடு, வைக்கியல்ல, பாலையடிவட்டை, போன்ற பல கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களின் நிலமைகள் பற்றி விசாரித்துள்ளார்.

இதன்போது தமிழர்களின் கால்நடைகள் சுடப்படுவது, காணிகள் சூறையாடப்படுவது, நன்னீர் சிறு மீனவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், உட்கட்டுமான புனரைமப்பு வேலைகள், போக்குவரத்து வசதிகள் ஆலயங்களின் நிர்மாண பணிகள் பற்றியும் அங்குள்ள மக்கள் பாராளுமன்ற உறுப்பினருக்கு எடுத்துக் கூறியிருந்தனர்.

இவற்றிற்கு உரிய தீர்வினை பெற்றுத்தருவது தொடர்பில் முயற்சிகளை மேற்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அம்மக்களிடம் தெரிவித்தார்.



 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .